சென்னையில் செப்.30ல் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா

சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதியன்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2018-08-29 07:49 GMT
தமிழக அரசு சார்பில் பல்வேறு நகரங்களிலும் கடந்த ஓராண்டாக எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், தலைமை செயலாளர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நிர்வாக  காரணங்களால் சென்னை மற்றும் கன்னியாகுமரியில் மட்டும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், செப்டம்பர் 22ஆம் தேதி கன்னியாகுமரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதுபோல, செப்டம்பர் 30ஆம் தேதி அன்று சென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் அறிவித்துள்ளார். 

எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயங்கள் : வெளியீட்டு விழாவில் பிரதமர் பங்கேற்கக் கோரி கடிதம்



எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயங்கள் வெளியீட்டு விழா வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது. இதில், பிரதமர் மோடி பங்கேற்கக் கோரி தமிழக அரசு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நினைவுபடுத்தும் விதமாக அவரது உருவம் பொறித்த 5 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நாணயங்கள் அச்சடிக்கும் பணி மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.  



Tags:    

மேலும் செய்திகள்