வனப்பகுதிக்குள் நடமாடும் காட்டு யானைகள் ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு

நாட்டிலேயே முதன்முறையாக காட்டு யானைகளின் நடமாட்டத்தை ஆளில்லா விமானம் மூலம் தமிழக வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.

Update: 2018-08-29 03:58 GMT
கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் வழியில், அமைந்துள்ளது மாங்கரை வனப்பகுதி. இங்கு வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும், இதனால் ஊருக்குள் அவ்வப்போது காட்டு யானைகள் புகுந்து விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.. இதையடுத்து யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே அறிந்து, ஊருக்குள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதன் படி, ஆளில்லா விமானத்தை பறக்க விட்டு,காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தனர். 
Tags:    

மேலும் செய்திகள்