பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை : மறு பரிசீலனை செய்ய பிளாஸ்டிக் சங்கம் கோரிக்கை
பதிவு: ஆகஸ்ட் 21, 2018, 09:36 PM
தமிழ்நாடு - புதுச்சேரி மாநில பிளாஸ்டிக் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இச்சங்கத்தின் தலைவர் சங்கரன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மறு பரிசீலனை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.