ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு 43-வது நாளாக தடை நீட்டிப்பு
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 11:59 AM
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை,43-வது நாளாக நீடிக்கிறது.இன்றைய நிலவரப்படி, வினாடிக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மாவட்ட வருவாய்,காவல் மற்றும் தீயணைப்பு துறையினர் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.