பவானி அம்மன் கோயில் ஆடி திருவிழா
பதிவு: ஆகஸ்ட் 19, 2018, 05:25 PM
சென்னை திருவொற்றியூரில் உள்ள பெரிய பாளையத்து பவானி அம்மன் கோயில் ஆடி திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.திருவொற்றியூர் எல்லையம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்தும், அலகு குத்தியபடி சென்ற பக்தர்கள்,அம்மனுக்கு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

ரேணுகாம்பாள் ஆலயத்தில் பால்குட உற்சவம்காஞ்சிபுரம் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீஅன்னை ரேணுகாம்பாள் ஆலயத்தில் ஆடி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த பால்குட ஊர்வலத்தில்,300-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.கச்சபேஸ்வரர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ஏந்தி வந்த அவர்கள்,முக்கிய வீதிகள் வழியாக வந்து அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

ஐயப்பன் கோயிலில் இருமுடி காணிக்கைஓணம் பண்டிகை திருநாளை ஓட்டி,தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள்,மாலை அணிந்து சபரிமலை செல்வது வழக்கம்.அங்கு தற்போது வெள்ளம் காரணமாக சபிரமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு செல்ல முடியாததால்,ஸ்ரீவில்லிபுத்தூரில் மாலை அணிந்த பக்தர்கள்,அங்குள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி பிரார்த்தனையை நிறைவேற்றினர்.