ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளுக்கு தடை கோரிய மனு - தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்
பதிவு: ஆகஸ்ட் 17, 2018, 06:41 PM
* ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

* தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் தொடர்ந்த வழக்கை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தது.