திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பாலியல் ரீதியாக தவறாக ஈடுபடுத்தப்பட்டதாக வழக்கு : 2 காவலர்கள் விடுதலை
பதிவு: ஆகஸ்ட் 12, 2018, 12:21 PM
சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு செல்போன் திருட்டு தொடர்பான புகாரில் 5 சிறுவர்களை கைது செய்த போலீசார், அவர்களை மாம்பலம் காவல் நிலையத்தில் அடைத்துள்ளனர். அன்றைய தினம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த  காவலர்கள் சேதுராமன், சீனிவாசன் ஆகியோர் சிறுவர்களை ஓரின சேர்க்கை ஈடுபட வைத்து ரசித்ததாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து 2 பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா விசாரித்து வந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. வழக்கில் தொடர்புடைய அனைத்து சாட்சிகளும்  பிறழ்சாட்சியம் அளித்துள்ள நிலையில் குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் 2  காவலர்களையும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார்.