காவிரியில் வெள்ளம் - பொதுமக்களுக்கு எச்சரிக்கை...

மேட்டூர் அணை மீண்டும் முழுகொள்ளளவை எட்டியது...12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Update: 2018-08-12 05:24 GMT
கர்நாடக அணைகளில் இருந்து, ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு, அதிகரித்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தாழ்வான பகுதிகளில் சேலம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மேட்டூர் அணையில் இருந்து அதிக நீர் வெளியேற்றப்படுவதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி,  தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வெள்ள தடுப்பு நடவடிக்கை குறித்து  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். 

மேட்டூர் அணை உறுதியாக உள்ளது

மேட்டூர் அணை உறுதியாக உள்ளதாகவும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அணையின் கண்காணிப்பு பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். 



காவிரி கரையோரம் உள்ள வீடுகளுக்குள் புகுந்த தண்ணீர் 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதையடுத்து வருவாய்த்துறை  அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களை பாதுகாப்பாக மீட்டனர். அவர்கள் அனைவரும் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.





Tags:    

மேலும் செய்திகள்