ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5.75 கோடி கொள்ளை - 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலங்கவில்லை

சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் வங்கி பணம் ஐந்தே முக்கால் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் துப்பு துலக்க முடியாமல் சிபிசிஐடி போலீஸ் திணறி வருகின்றனர்.

Update: 2018-08-09 02:31 GMT
* கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  சேலத்தில் இருந்து சென்னை சென்ற ரயிலில் ஐ.ஓ.பி. வங்கிக்கு சொந்தமான பலகோடி ரூபாய் பழைய ரூபாய் நோட்டுக்கள் 228 பெட்டிகளில் கொண்டு செல்லப்பட்டன.  

* நள்ளிரவில் ரயிலின் மேற்கூரையை உடைத்து பணம் கொண்டு செல்லப்பட்ட பெட்டிக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஐந்தே முக்கால் கோடி ரூபாயை  கொள்ளையடித்து சென்றனர். ரயில் சென்னை எழும்பூர் வந்த பிறகுதான் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.

* பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக முதலில் ரயில்வே போலீசார் விசாரித்தனர். பின்னர் அது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து  பணப்பெட்டிகளுக்கு பாதுகாப்பாக சென்ற காவலர்கள், வேன் ஓட்டுனர்கள், வங்கி பணம் கையாண்டதில் தொடர்புடையவர்கள் மற்றும் ரயில்வே பார்சல் அலுவலக ஊழியர்கள் , போர்ட்டர்கள் என பலரிடம் விசாரணை நடத்தினர்.  

* ரயில் நிலைய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் கொள்ளை சம்பவம் நடைபெற்று 2 ஆண்டுகள் ஆகியும் ஐந்தே முக்கால் கோடி ருபாய் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் யார், ஓடும் ரயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டது என்பது உள்ளிட்ட விவகாரங்கள் இதுவரை துப்புதுலங்கவில்லை என சிபிசிஐடி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்