புதுக்கோட்டையின் காவல் தெய்வமாக விளங்கும் குங்கும காளி அம்மன்

புதுக்கோட்டையில் எளிமையான தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் குங்கும காளி அம்மனின் சிறப்புகள்.

Update: 2018-08-01 15:45 GMT
புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்டு வந்த தொண்டைமான் மன்னர்கள் பல்வேறு கோயில்களை கட்டினர். அப்படி அரண்மைக்குள் உருவான  ஒரு கோவில் தான் குங்கும காளி அம்மன் கோயில். வெறும் கருங்கல்லில் ஒரு சூலத்தை வடிவமைத்து அதையே அம்பாளாக பாவித்து மன்னர்கள் வழிபட்டு வந்தனர். ஆனால் தினமும் மன்னரின் கனவில் வந்த அம்மன், தன்னை சாதாரண பக்தர்களும் வணங்க அனுமதிக்க வேண்டும் என கூறி மறைந்துள்ளார். இதையடுத்து  அம்மனை அரண்மனைக்கு வெளியே வைத்து வழிபட தொடங்கினர். அன்றிலிருந்து புதுக்கோட்டை மக்களின் காவல் தெய்வமாக மாறிப்போனாள் இந்த குங்கும காளி.இந்த கோயிலுக்கென தனி கட்டடமோ, கோவில் கூரையோ, மண்டபமோ எதுவும் கிடையாது. செடி, கொடிகளுக்கு மத்தியில் சாதாரண கற்சிலை தோற்றத்தில் காட்சி தருகிறாள். உருவமும் இல்லாத நிலையில் இருந்த அம்மனை வணங்கி வந்த அப்பகுதி மக்கள், தற்போது ஒரு உருவமும் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். குங்கும அலங்காரத்தில் காட்சி தரும் அம்பிகையே குங்கும காளியாக கொண்டாடப்படுகிறாள்.

ஊரின் காவல் தெய்வமாக குங்கும காளி இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்களை நிறுத்தி அம்பாளை வழிபட்ட பின்னர் பயணத்தை தொடர்வது வழக்கம். தங்கள் பயணத்தின் போது அம்பாளும் கூடவே வந்து காத்து நிற்பாள் என்பது ஐதீகம்ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் இங்கு பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. குங்கும அலங்காரத்தில் கண் கொள்ளா விருந்தருக்கிறாள் இந்த கோதை நாயகி.பில்லி சூனியம், நோய் நொடி என எந்த பிரச்சினைகளாக இருந்தாலும் அதை போக்கும் அம்மனாக காட்சி தருகிறாள். இருக்கும் இடத்தில் இருந்தபடி மக்களை காக்கும் காவல் தெய்வமாக, எல்லாம் அறிந்த சக்தியாக இருக்கும் துர்க்கையும் இவளே.


Tags:    

மேலும் செய்திகள்