தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரனின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Update: 2018-08-01 12:50 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரனின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் தினகரன் வீட்டு முன்பு நின்று கொண்டிருந்த கார் தீ வைக்கப்பட்டது.  இதனால், டிஜிபி அலுவலகத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் பழனியப்பன் மனு கொடுத்தார். அதன் அடிப்படையில் சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு சுழற்சி முறையில் 5 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்