பயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு
பதிவு: ஆகஸ்ட் 01, 2018, 04:02 PM
கோவை, சுந்தராபுரம் பகுதியில் நேற்று நடந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்தனர். 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பேருந்து மற்றும் ஆட்டோவுக்காக காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த சொகுசு கார்,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து,  சாலையோரத்தில் நின்றிருந்தவர்கள் மற்றும் அங்கிருந்த ஆட்டோ மீது மோதியது.



இந்த விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காருக்குள் இருந்த ஓட்டுநரை வெளியே இழுத்து, சரமாரியாக தாக்கினர். ஓட்டுநர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

இந்நிலையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சோமசுந்தரம் என்பவருக்கு திடீரென நினைவு வந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளா​ர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது. ஓட்டுநர், மது போதையில் காரை அதி வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

இதனிடையே, கார் ஓட்டுநர் ஜெகதீசனை கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் பாலமுருகன் முன்பு, ஆஜர்படுத்தினர். இதையடுத்து, ஓட்டுநர் ஜெயகதீசனை 14-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.