சி.பி.ஐ. வசம் சிலை கடத்தல் வழக்குகள்...?

சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2018-08-01 09:48 GMT
சிலை கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாதேவன் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் வழக்கறிஞர்,  'ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்படவில்லை' என்றும் நீதிமன்றத்தால் இந்த பிரிவு அமைக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை பொன்.மாணிக்கவேல், ஒரு அறிக்கை கூட அரசுக்கு தாக்கல் செய்யவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், சிலை கடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து, தமிழக அரசின் கொள்கை முடிவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 8ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கோவில் சிலை கடத்தல் வழக்குகள் : சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கூடாது - அன்புமணி

கோவில் சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க அரசு
எடுத்துள்ள முடிவு, குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கான சதி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சிலைக் கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையை பொன்.மாணிக்கவேல் குழு ஏற்ற பிறகு தான், ராஜராஜன், உலகமாதேவி சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்குகளை சிபிஐக்கு மாற்றும் திட்டத்தை உயர்நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது என்றும் தமது அறிக்கையில் அன்புமணி
வலியுறுத்தி உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்