சொல்வதை செய்யும் யானைகள்...!
பதிவு: ஜூலை 15, 2018, 06:00 PM
நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் உள்ள 8 யானைகளுக்கு கும்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியில் மரம் இழுத்தல், வனக்கொள்ளையர்களை சுற்றி வளைத்தல்,  காட்டு யானைகளை விரட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மேலும் கேரள கும்கி பயிற்சியாளர்களால் ஒரு கோட்டில் நடத்தல், சேர் மீது நடப்பது உள்ளிட்ட  பயிற்சிகளும் யானைகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.