யோகாவில் சாதனை படைத்து வரும் 10 வயது தமிழக சிறுவன் அரசு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள்...!
பதிவு: ஜூலை 15, 2018, 03:32 PM
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லோகேஷ் என்ற 10 வயது சிறுவன், பல்வேறு நாடுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்றுள்ளான். 3 வயதில் இருந்தே யோகா பயிற்சி மேற்கொண்டு வரும் லோகேஷ், பத்து நிமிடங்களில் ஐம்பது வகையான ஆசனங்களை செய்து அசத்துகிறார். யோகாவில் மேலும் சிறந்து விளங்க அரசு உதவ முன்வர வேண்டும் என லோகேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.