தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது விபரீதம் - பயிற்சியாளர் தள்ளி விட்டதில் மாணவி உயிரிழப்பு

தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளிவிட்டதில் மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி உயிரிழந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-07-13 01:47 GMT
தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது விபரீதம் - மாணவி உயிரிழப்பு

கோவை நரசிபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று மாணவ, மாணவிகளுக்கு  தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின் ஒரு பகுதியாக அவசர காலத்தில் மாடியில் இருந்து குதிப்பது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. கல்லூரியின் இரண்டாம் மாடியில் நடைபெற்ற  இந்த பயிற்சின்போது இரண்டாம் ஆண்டு மாணவி லோகேஸ்வரி,  மாடியில் இருந்து குதிக்க தயாரானார். எனினும் பயத்தில் அவர் தயங்கிய நிலையில்,பயிற்சியாளர் குதிக்குமாறு கூறி தள்ளி விட்டார். நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி லோகேஸ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதி முதல் மாடி தடுப்பு சுவரில் மோதியது.


மகள் பயிற்சிக்கு சென்றது எங்களுக்கு தெரியாது - பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி


Tags:    

மேலும் செய்திகள்