தமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி

தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

Update: 2018-07-12 10:58 GMT
யானைகள் வழித்தடங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து  வருவதாகவும் கூறி, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யட்டன.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி. லோகூர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் சுமார் 400 விடுதிகள் கட்டப்பட்டு இருப்பதாக, மனுதாரர்கள் அறிக்கையாக தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அந்தப் பகுதிகளில் புதிய கட்டுமானங்களை அனுமதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்