காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது
பதிவு: ஜூலை 09, 2018, 04:23 PM
காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

ஆயுதப்படை காவலர் முத்துகுமரன் சனிக்கிழமை இரவு பணியை முடித்துவிட்டு  இருசக்கர வாகனத்தில் பூந்தமல்லி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் காவலரின் வாகனத்தில் மோதுவது போல் வரவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில், மாணவர் சரவணன் காவலரை தாக்கியுள்ளார். சம்பவம் தொடர்பாக சரவணனை நேற்று கைது செய்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர். சனிக்கிழமை நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.