தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் காவலர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் - உயர்நீதிமன்றம் அதிரடி

10 ஆண்டுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்த காவலருக்கு காப்பீட்டு தொகை ரூ.10 லட்சத்தை ஒரு மாதத்தில் வழங்க உத்தரவு

Update: 2018-07-07 10:10 GMT
* தமிழ்நாடு காவல் துறை அதிகாரிகள், காவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம், பணியில் இருந்த போது இயற்கையாக மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினரும் பெற உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ளது.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  தமிழ்நாடு கமாண்டோ படை உதவி ஆய்வாளராக பணியாற்றிய நித்தியானந்தம், 2008 -ல் பணி நிமித்தமாக ஜோலார்பேட்டைக்கு ரயிலில் சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* தமிழக காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 10 லட்சம் ரூபாய் காப்பீட்டு தொகை கோரி நித்தியானந்தத்தின் மனைவி புவனேஸ்வரி அளித்த விண்ணப்பத்தை டி.ஜி.பி. நிராகரித்து உத்தரவிட்டார்.

* இந்த உத்தரவை எதிர்த்து புவனேஸ்வரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அவருக்கு காப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து உள்துறை செயலாளர் டி.ஜி.பி. தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆர்.சுப்பிரமணியன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 

* விபத்துக்களில் சிக்குவோருக்கு மட்டுமே திட்டத்தின் பலன் எனக் கூறுவது, திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து விடும் என தெரிவித்தனர். இந்த திட்டத்தின் பலன்கள் இயற்கையாக மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரும் பெற உரிமை உள்ளது எனக் கூறிய நீதிபதிகள், 2009 முதல் 9 சதவீத வட்டியை கணக்கிட்டு, காப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்தில் புவனேஸ்வரிக்கு வழங்க வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்