தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை ஆணையத்தின் ஆய்வு வரம்பு விரிவு
பதிவு: ஜூலை 07, 2018, 12:19 PM
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையத்தின் ஆய்வு வரம்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மே 22-ஆம் தேதி தூத்துக்குடி சம்பவம் மட்டுமின்றி அதற்கு பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த தகவல்களையும் வாக்குமூலமாகவோ மனுக்களாவோ வருகிற 27ஆம் தேதி வரை தூத்துக்குடி மற்றும் சென்னையில் உள்ள அலுவலகத்தில் அளிக்கலாம். இதற்கான அறிவிப்பு தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள விசாரணை ஆணைய முகாம் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது.