2-வது நாளாக சோதனை நீடிப்பு :தொழிலதிபர் குமாரசாமியிடம் விசாரணை

சத்துணவு முட்டை மற்றும் சத்துமாவு விநியோகித்த தனியார் நிறுவனம் மீது வரி எய்ப்பு புகார் எழுந்ததை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை..

Update: 2018-07-06 14:07 GMT
சத்துணவு முட்டை மற்றும் சத்துமாவு  விநியோகித்த தனியார் நிறுவனம் மீது வரி எய்ப்பு புகார் எழுந்ததை தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள், 2 - வது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். முதல் நாளான நேற்று, சென்னையில் மயிலாப்பூர், திருவான்மியூர், நுங்கம்பாக்கம் மற்றும் நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட 76 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
2 - வது நாளாக இன்று, ராசிபுரம் அருகே உள்ள உடுப்பதான் புதூர், புதுச்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில், சத்து மாவு நிறுவனத்தின் அலுவலகங்களில், சோதனை நடத்தினர்.  தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நடந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முக்கிய ஆவணங்களும், வெளிநாட்டில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு முட்டை , சத்துமாவு, பருப்பு உள்ளிட்ட பொருட்களை சப்ளை செய்யும் கிறிஸ்டி பிரைடு கிராம் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள், அதிரடி விசாரணை நடத்தினர். 
Tags:    

மேலும் செய்திகள்