ஐபிஎல் கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...
ஐபிஎல் கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...;
ஐபிஎல் கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள சூழலில், பிளே ஆஃப் வாய்ப்பு சாத்தியம் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்...
பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லாத ஐபிஎல் கிரிக்கெட் தொடர், லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது
சன் ரைசர்ஸ் ஐதராபாத் மட்டும் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், மற்ற 7 அணிகளும், தங்களது இருப்பை தக்க வைக்க மல்லுக்கட்டி வருகின்றன
சென்னை, டெல்லி அணிகள் 18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்தால், QUALIFIER போட்டியில் தோற்றாலும், இறுதிப்போட்டிக்கு செல்ல கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும்.
இதனால் முதல் இரண்டு இடங்களை பிடிக்க சென்னை, டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது
பெங்களூரு அணி 14 புள்ளிகளில் இருப்பதால்,
மீதமுள்ள 3 போட்டிகளில் வென்றால் முதல் இரண்டு இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது
மாறாக 3 போட்டிகளிலும் தோற்றால், 3 மற்றும் 4வது இடத்திற்கு 5 அணிகள் மல்லுக்கட்டும்.
கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் அணிகள் தலா 10 புள்ளிகளில் உள்ளன.
இதனால் இந்த 4 அணிகளுக்கும், இனி விளையாடப்போகும் 2 போட்டிகளுமே வாழ்வா சாவா ஆட்டம்..
ஒருபக்கம் டாப் 2 இடங்களுக்கும், மறுபக்கம் 4வது இடத்திற்கும் கடும் போட்டி நிலவுவதால், இனிவரும் போட்டிகள் மீது எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.