இந்தியா - இங்கிலாந்து மோதும் 3-வது டெஸ்ட்: லீட்ஸ் நகரில் இன்று பிற்பகல் தொடக்கம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.;

Update: 2021-08-25 07:31 GMT
இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் நகரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. ஒன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ள நிலையில், இந்த போட்டியிலும் இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்