டீ விற்கும் ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர் - வறுமையிலும் சாதனை செய்த இளைஞர்

அரசு வேலை வழங்க கோரிக்கை

Update: 2018-09-07 21:24 GMT
ஹரிஷ் குமார்.. கிரிக்கெட் வீரராக இவர் இருந்திருந்தால், இந்நேரம் கோடி கோடியாக பணம் சம்பாரித்து இருப்பார். ஆனால் ஆசிய போட்டி SEPAK TAKRAW பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றும் தமது குடும்பத்தை காப்பாற்ற ஹரிஸ் குமார் டீ விற்கிறார். டெல்லியில் ஏழை குடும்பத்தை சேர்ந்த ஹரிஷ் குமார். பகல் நேரத்தில் ஆட்டோ ஓட்டுனராகவும், மாலை நேரத்தில் டீ விற்பவராகவும் இருந்து வந்துள்ளார்.  கிடைக்கும் நேரத்தில் மைதானத்திற்கு சென்று பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்    கடின உழைப்பால் ஆசிய போட்டி வரை சென்று ஹரிஷ் வெண்கலம் வென்றுள்ளார். ஆனால் பதக்கம் வென்று ஊர் திரும்பியவுடன் ஹரிஷ் குமார் டீ விற்று வருகிறார். தமது குடும்பத்திற்காக இந்த பணியை தாம் செய்வதாக கூறும் ஹரிஸ் குமார், தமக்கு அரசு வேலை வழங்கினால் குடும்பத்தை காப்பாற்ற உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைக்கிறார். ஹரிஷ் குமாருக்கு மத்திய, மாநில அரசு நிதி உதவி அளித்தாலும்,  நிலையான வருமானம் இல்லாமல் குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டுனராகவும், டீயை யும் விற்று வருகிறார். குடும்ப கஷ்டம் இருந்தாலும், நாட்டுக்காக பெருமை சேர்க்க கடுமையாக பயிற்சி மேற்கொள்வேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ஹரிஷ் குமார். 

Tags:    

மேலும் செய்திகள்