92-வது முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி தொடர் தொடங்கியது

இறுதி ஆட்டம் 16 ம் தேதியும் நடைபெறுகிறது.

Update: 2018-09-06 19:49 GMT
92-வது முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டம் வருகிற 15  தேதியும் , இறுதி ஆட்டம் 16 ம் தேதியும் நடைபெறுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்