இந்தியா Vs இங்கிலாந்து நாளை கடைசி டெஸ்ட் : இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.

Update: 2018-09-06 14:04 GMT
இந்தியா, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.  தொடரை இந்தியா ஏற்கனவே 3க்கு1 என்ற கணக்கில் இழந்த நிலையில், இழந்த பெருமையை மீட்கும் உத்வேகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது. 

இதற்காக லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தொடரை இழந்த நிலையில் முக்கியத்துவம் குறைந்த இந்தப் போட்டியில் இந்தியா செய்ய வேண்டியது என்ன?

தொடக்க வீரராக UNDER 19 இந்திய அணியின் கேப்டனாக இருந்த பிரித்திவி ஷாவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் 14 முதல் தர போட்டியில் விளையாடி ஆயிரத்து 418 ரன்கள் குவித்தார். இங்கிலாந்துக்கு கடந்த மாதம் இந்திய ஏ அணியில் விளையாடிய அவர் 188 ரன்கள் விளாசி இருந்தார்.

அடுத்ததாக ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிட்டு, HANUMA VIHARI க்கு நடுவரிசையில் வாய்ப்பு வழங்க வேண்டும்.  தற்போது விளையாடும் வீரர்களிலேயே இவர் தான் அதிக சராசரி ரன்களை குவித்தவர். இவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜொலித்தவர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு ஏதுவான பேட்டிங் நுணுக்கங்களுடன் விளையாடக் கூடியவர். ஐதராபாத்தை சேர்ந்த விஹாரி,  VVS LAXMAN போல் வலம் வர வாய்ப்பு உள்ளது. காயத்தால் அவதிப்படும் வரும் அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜாவுக்கும் வாய்ப்பு வழங்கலாம். 

திறமையான இளம் வீரர்களுக்கு ஒரு முறையாவது வாய்ப்பு அளித்தால் மட்டுமே அவர்கள் திறமை வெளிப்படும். ஆனால் கோலி, ரவி சாஸ்திரி இதனை செய்யுமா என்ற கேள்வி மட்டுமே அனைவரின் மனதிலும் உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்