இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி வெற்றி, தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்றது

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 60 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று, இங்கிலாந்து அணி தொடரை கைபற்றியது.

Update: 2018-09-03 01:18 GMT
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்து களமிறங்கி 246 ரன்களில் சுருண்டது. பின்னர் ஆடிய இந்தியா, புஜாராவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் 273 ரன்கள் சேர்த்தது.
இதையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி,  271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. 

இதனைதொடர்ந்து இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 245 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடிய இந்தியா அணி தொடர்ச்சியாக 3 விக்கெட்களை இழந்தது.

 நிதானமாக ஆடி வந்த கோலி 58 ரன்களிலும்,ரகானே 51 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இந்திய அணி 184 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன்மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இப்போட்டியின் வெற்றியின் மூலம் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்று தொடரைக் கைப்பற்றியது. 

Tags:    

மேலும் செய்திகள்