அருவியை கண்டு ரசித்த தோனி
பதிவு: ஆகஸ்ட் 05, 2018, 01:28 PM
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக நெல்லை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி,அங்குள்ள சுற்றுலா தலமான  குண்டலாறு நீர்தேக்க பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி சென்று பார்த்தார். தோனியை பார்த்த ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.