இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 274 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

Update: 2018-08-03 02:22 GMT
பர்மிங்காமில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து தனது முதலாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்க முதலே தடுமாறியது. இறுதி வரை தனி ஆளாக போராடிய கேப்டன் கோலி 172 பந்தில் சதமடித்தார். 

டெஸ்ட் போட்டியில் இது அவருக்கு 22-வது சதம் மற்றும் இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்திருக்கும் முதல் சதம் ஆகும். 149 ரன்கள் எடுத்திருந்த கோலி ஆதில் ரஷித் பந்தில் கேட்ச் ஆனார்.  இதனால், இந்திய அணி முதல் இன்னிங்ஸ் 274 ரன்களுக்கு ஆல்- அவுட் ஆனது. இங்கிலாந்தின் சாம் குர்ரான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். 13 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்