இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

Update: 2018-07-04 00:48 GMT
மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் பட்லர் 69 ரன்கள் குவித்தார்.இந்தியா சார்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் ஏமாற்றம் தந்தார்.பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுல் அதிரடியாக ஆடினார்.இங்கிலாந்து பந்துவீச்சை  வெளுத்துவாங்கிய ராகுல் 27 பந்துகளில் அரைசதம் கடந்தார்.ரோகித் சர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.மறுமுனையில் அதிரடி காட்டிய ராகுல் சதம் அடித்தார். இதன்மூலம் டி-20 போட்டியில் 2 சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். இந்திய அணி 18 புள்ளி 2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்