தண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் வினோத போட்டி - பிரிட்டன் இளைஞர்களிடம் அதிக வரவேற்பு
பதிவு: ஜூன் 13, 2018, 09:19 AM
தண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் விநோத போட்டி பிரிட்டனில் பிரபலமாகி வருகிறது. FIELD HOCKEY, ICE ஹாக்கி என ஹாக்கி விளையாட்டு பல பரிணாமங்களை பெற்றுள்ளது. இந்நிலையில், நீச்சல் குளத்தில் தண்ணீருக்குள் ஹாக்கி விளையாடும் வினோத போட்டியை விளையாட பிரிட்டன் இளைஞர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தப் போட்டி இருப் பிரிவுகளாக 30 நிமிடம் நடைபெறும். ஒரு அணியில் 6 வீரர்கள் இடம்பெற்று, தண்ணீரிலே நீந்தி கோல் அடிக்கின்றனர். UNDERWATER HOCKEY போட்டிக்கு பிரிட்டனில் தேசிய அளவில் சாம்பியன்ஷிப் போட்டியும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.