"நிதி சுமை-சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது"
தமிழகத்தின் நிதி நிலையையும் நிதி சுமையையும் சமாளிக்க அறிக்கை மட்டும் போதாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்;
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதில் கவனிக்கவேண்டிய செய்திகள் பல உண்டு என்றாலும் வெளிப்படையான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கவலை அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த நிதிநிலை வெள்ளை அறிக்கை அதிர்ச்சியுடன் சிந்திக்க வைக்கிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.