அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மீதான மோசடி புகார் - 108 பேரிடம் விசாரணை?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்தவர் நிலோபர் கபில். அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக 108 பேரிடம் பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது.;

Update: 2021-06-06 11:35 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சேர்ந்தவர் நிலோபர் கபில். அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, அரசு வேலை வாங்கி தருவதாக  108 பேரிடம்  பேரிடம் 6 கோடி ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை வாங்கிக் கொண்டு நிலோபர் கபில் மோசடி செய்ததாக,  அவரது உதவியாளர் பிரகாசம் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்தார்.  இதுகுறித்து விசாரணை செய்து அறிக்கை அனுப்ப திருப்பத்தூர் எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில்,  துணைக் கண்காணிப்பாளர்கள்  பிரவீன்குமார், சச்சிதானந்தம் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர். இதுவரை 15 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், மற்றவர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பெயர் மட்டுமே உள்ள நிலையில், முகவரிகள் இல்லாததால் சம்மன் அனுப்புவதில் சிக்கல் உள்ளதாகவும், விரைவில் அந்த சிக்கல்கள் களைந்து விசாரணை முடிக்கப்படும் என தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்