புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த நல்லவாடு பகுதியில் படுகை அணை, படகு குழாம் அமைக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி
சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி நல்லவாடு பகுதியில் படுகை அணை அமைத்து, படகு குழாம் அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.;
சுற்றுலாவை மேம்படுத்த புதுச்சேரி நல்லவாடு பகுதியில் படுகை அணை அமைத்து, படகு குழாம் அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மணவெளி தொகுதிக்கு உட்பட்ட கடற்கரை கிராமமான நல்லவாடு பகுதியில் மூன்றரை கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தினை முதலமைச்சர் நாராயணசாமி இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், விரைவில் இந்த பகுதியில் ஒரு படுகை அணை அமைத்து சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் படகு குழாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் ஒரு சில தினங்களில் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.