கோவை : தமிழக மாணவர்களுடன் காணொலியில் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி

பள்ளிகளில் திறன் வளர்க்கும் ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்படும் என தமிழக கல்லூரி மாணவர்களுடன் நடத்திய காணொலி காட்சியின் போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-11 14:27 GMT
விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 - வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். 

அப்போது, என் இனிய சகோதர , சகோதரிகளே எனக்கூறி பிரதமர் மோடி, தனது உரையை தமிழில் துவக்கினார். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருவதாகவும், திறன்வாய்ந்த பணியாளர்கள் இல்லாததால் அவர்களால் தொழில் முனைவோர்களாக உருவாக முடியவில்லை என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் திறன் வாய்ந்த பணியாளர்களை உருவாக்க அரசு பயிற்சியளித்து வருவதாகவும் நாடு முழுவதும் 5 ஆயிரம் பள்ளிகளில் திறன் வளர்க்கும் ஆய்வுக்கூடங்கள்  அமைக்கப்படும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்