"பாஜக எம்.எல்.ஏ ராம் கடாமின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ5 லட்சம் பரிசு" - மஹாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்

மராட்டிய மாநில பாஜக எம்.எல்.ஏ ராம் கடமின் நாக்கை அறுப்பவர்களுக்கு, 5 லட்ச ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என மராட்டிய மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத் சவ்ஜி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-07 05:53 GMT
சமீபத்தில் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, இளைஞர்கள் மத்தியில் பேசிய பாஜக எம்.எல்.ஏ ராம் கடம், நீங்கள் காதலிக்கு பெண்களை கடத்தி வந்து உங்களுக்கு  திருமணம் செய்து வைப்பேன் என தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரல்கள் எழுப்ப வரும் நிலையில் அவரின் நாக்கை அறுப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என சுபோத் சவ்ஜி தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்