பேரறிவாளன் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு : மு.க. ஸ்டாலின் வரவேற்பு

ராஜீவ் கொலை கைதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-06 13:01 GMT
ராஜீவ் கொலை கைதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என ஆரம்பம் தொட்டே திமுக வலியுறுத்தி வந்ததை சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சரவையை கூட்டி, 7 பேரையும் விடுதலை செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் கால தாமதமின்றி, விடுதலை செய்ய அவசர நடவடிக்கை எடுக்குமாறு, தமது டுவிட்டர் பதிவில் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்