ஈரோடு : கூட்டுறவு சங்க தேர்தல் - அ.ம.மு.க. வெற்றி
பதிவு: செப்டம்பர் 04, 2018, 10:39 AM
ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த பருவாச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றுள்ளது. 

அக்கட்சி சார்பில் போட்டியிட்ட 11 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தோல்வியை சந்தித்துள்ளன.