"அமைச்சர் விஜயபா​ஸ்கரை முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்
பதிவு: செப்டம்பர் 02, 2018, 11:43 AM
சுகாதாரத் துறை அமைச்சர்  விஜயபாஸ்கரின் தந்தை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளதாக வெளியான தகவல்கள் குறித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பின்னரும் விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் நீடிப்பது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிக்கையில், ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விஜயபாஸ்கர் பதவி விலகுவது தான் அவர் எடுத்துக் கொண்ட பதவி பிரமாணத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்றும் ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக மறுத்தால் முதலமைச்சர் உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். முதலமைச்சர் தயங்கினால் அரசியல் சட்டத்தின் மாண்பை காப்பாற்றும் மிக முக்கியப் பொறுப்பில் உள்ள ஆளுநர் அமைச்சர்  விஜயபாஸ்கரை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்