8-ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - க.அன்பழகன்

வருகிற 8 ஆம் தேதி, சென்னையில் திமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள், மற்றும் திமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என, அக்கட்சியின் பொதுசெயலாளர் க.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-02 02:58 GMT
க.அன்பழகன், வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில், 8ஆம் தேதி காலை 10 மணிக்கு,ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்த கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்