ஸ்மார்ட் சிட்டி டெண்டர் - சிபிஐ விசாரணை தேவை: திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழக ஸ்மார்ட் சிட்டி டெண்டர் முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-09-01 12:05 GMT
ஏஸ்டெக் மெஷினரி என்ற நிறுவனம், ஸ்மார்ட் சிட்டி பணிகள் எதுவும் செய்யவில்லை என்றும், அனுபவமே இல்லாத நிறுவனத்திற்கு, 149 கோடி ரூபாய் டெண்டர் எப்படி வழங்கப்பட்டது என  கேள்வி எழுப்பியுள்ளார். 

மத்திய அரசு நிதி செலவிடப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்ட டெண்டர்களில் நடைபெறும் முறைகேடுகளை மத்திய பா.ஜ.க. அரசு ஏன் தட்டிக்கேட்கவில்லை என்றும் ஸ்டாலின் வினவியுள்ளார். 

எனவே, தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி டெண்டர்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்