"பண மதிப்பிழப்பு முற்றிலும் தோல்வியடைந்த திட்டம்" - ராகுல்காந்தி

பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட திட்டம் முற்றிலும் தோல்விஅடைந்த விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Update: 2018-08-31 02:17 GMT
பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட திட்டம் முற்றிலும் தோல்விஅடைந்த விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். செல்லாத நோட்டு திரும்ப பெறப்பட்டது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட திட்டத்தால் செல்வந்தர்கள் மட்டுமே பயனடைந்ததாகவும் ஏழை மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானதாகவும் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் இணைந்து , நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்து விட்டதாகவும்  ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி - அனில் அம்பானி இடையே என்ன ஒப்பந்தம்?

ரஃபேல் போர் விமானங்கள் முறைகேடு, குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு தெளிவுபடுத்த வேண்டும் என, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஹெச். ஏ. எல். விமான நிறுவனம் கடந்த 70 ஆண்டுகளாக விமானங்களை தயாரித்து வருவதாகவும், 520 கோடி ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட விமானத்தை ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு வாங்கியது ஏன் என்றும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கும், தொழிலதிபர் அனில் அம்பானிக்கும் இடையிலான ஒப்பந்தம் என்ன என்பது குறித்து நாடு அறிந்து கொள்ள விரும்புவதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்