"பண மதிப்பிழப்பு திட்டத்தால் இந்திய பொருளாதாரம் சீரடைந்துள்ளது" - அருண்ஜெட்லி

பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட திட்டத்தால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு இந்திய பொருளாதாரம் சீரடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 01:58 GMT
பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட திட்டத்தால் நாட்டில் கறுப்பு பணம் ஒழிக்கப்பட்டு இந்திய பொருளாதாரம் சீரடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை உயர்த்துவது ஆகியவையே அந்த திட்டத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டதற்கு பிறகு வருமானவரி வசூல் 6 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து, 10 லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் இதுவே பொருளாதார வளர்ச்சி சீரடைந்ததற்கான சாட்சி எனவும் அவர் கூறியுள்ளார். 

அதேபோல் வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 கோடியே 80 லட்சம் பேரில் இருந்து, 6 கோடியே 86 லட்சம் பேராக அதிகரித்துள்ளது மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்ட பிறகு சட்டவிரோதமாக வங்கிகளில் டிபாசிட் செய்து வரிஏய்ப்பு செய்த 18 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்