துணை முதலமைச்சர் பதவியை துறப்பதாக பேசினாரா - இல்லையா ?
பதிவு: ஆகஸ்ட் 25, 2018, 08:19 AM
துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என்று, சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிமுக செயற்குழுவில் பன்னீர் செல்வம் பேசியதாக  தகவல்கள் தெரிவித்தன. செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் இதனை உறுதி செய்தார்.இதே கருத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும்  உறுதிப் படுத்தினார்.ஆனால், செயற்குழுவில்,தாம் அவ்வாறு பேசியதாக பன்னீர் செல்வம் கூறவில்லை... மாறாக , அப்படிச் சொன்னது யார் என்று கேள்வி எழுப்பினார்.அதிமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ள புதிய பரபரப்பு.இன்னாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ,  துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் பேச்சை உறுதி படுத்தி உள்ள நிலையில்,அவர் அளித்துள்ள பதில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனிடையே, பதவி விலக தயார் என துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம் பேசியிருப்பது  தண்ணீர் மேல் எழுதப் பட்ட எழுத்து என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.