"குழம்பி போய் அறிக்கை வெளியிட்டுள்ளார் மு.க. ஸ்டாலின்" - அமைச்சர் ஜெயக்குமார்
பதிவு: ஆகஸ்ட் 20, 2018, 09:49 PM
உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் நடைபெறும் பாசன கால்வாய் மேம்பாட்டு பணிகளை, தூர்வாரும் பணிகளுடன் ஒப்பிட்டு, திமுக செயல் தலைவர் மு..க. ஸ்டாலின், குழம்பிப்போய் அறிக்கை வெளியிட்டு உள்ளதாக மீன் வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிக அளவில் மழை பெய்யும் போது, காவிரி நீர் கடலில் கலப்பது வழக்கம் தான் என்றும் இது திமுக ஆட்சி காலத்திலும் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். திருவாரூரில் உள்ள ஐநூற்று பிள்ளையார் கோயில் குளம் மழை பெய்தால் மட்டுமே நிரம்பும் என்றும், இது தெரியாமல் குளத்தில் தண்ணீர் இல்லை என மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்றும் டி. ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.