சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் - த.மா.கா. தலைவர் வாசன் கோரிக்கை
பதிவு: ஜூலை 11, 2018, 05:21 PM
"சிறு, குறு நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும்"

வெள்ளம், புயல், சரக்கு மற்றும் சேவை வரியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவி செய்ய முன்வர வேண்டும் என த.மா.கா. தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறு மற்றும் குறுந் தொழில்கள் மூலம் 40 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், 45 சதவீதம் பொருட்கள் ஏற்றுமதி ஆவதையும் சுட்டிக்காட்டி உள்ளார். பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு வேண்டிய உபகரணங்களை 20 சதவீதம் சிறு மற்றும் குறு நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்ற அரசு ஆணையை அமல்படுத்த வேண்டும் என்றும் வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.