கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மீது நில மோசடி வழக்கு பதிவு
பதிவு: ஜூன் 25, 2018, 03:16 PM
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நில மோசடியில் ஈடுபட்டதாகவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் கங்கராஜ் என்பவர் மைசூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சித்தராமையா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மைசூரில் உள்ள லட்சுமிபுரம் காவல் நிலையத்தில், முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக நிலம் வாங்குவது, ஏமாற்றுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.