தமிழக முதலமைச்சரை சந்தித்த மத்திய அமைச்சர் - தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை
பதிவு: ஜூன் 21, 2018, 05:26 PM
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை  மத்திய தொழில் வர்த்தக துறை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று சந்தித்தார். சென்னையில் நடந்த இந்த சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 40 நிமிடங்கள் வரை நடந்த இந்த சந்திப்பில் தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.