துப்பாக்கிச்சூட்டில், பலியானோரின் குடும்பங்களுக்கு நடிகர் விஜய் ஆறுதல்
பதிவு: ஜூன் 06, 2018, 07:20 AM
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். இதைதொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை இன்று காலை விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.