நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்
பதிவு: செப்டம்பர் 10, 2018, 01:30 PM
22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 17 வகையான துணை மருத்துவ படிப்புகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஆயிரத்து 882 இடங்கள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை வழங்கப்படுகின்றன.ஒரு விண்ணப்பத்தின் விலை 400 ரூபாய். விண்ணப்பங்களை, 22 அரசு மருத்துவ கல்லூரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் தங்களது ஜாதிச் சான்றிதழ் நகலை காட்டி, விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.